திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் மெட்ரிகுலேக்ஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்த பொன் சிங் என்பவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மாணவிகளை மண்டல அளவிலான போட்டிக்காக தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மது அருந்த சொல்லி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில், மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதை அடுத்து, அங்கு வந்த போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தியதில் உடற்கல்வி ஆசிரியர் கோவையில் தலைமறைவாக இருந்தார்.
அவரை நேற்றைய தினம் போக்சோ வழக்கின்படி கைது செய்து இன்று காலை திருச்செந்தூர் போலீசார் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும், இதற்கிடையே பள்ளியின் முதல்வர் சார்லஸ், பள்ளியின் செயலர் சையது அகமது ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளி முதல்வர், செயலர் என 3 பேரை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
The post திருச்செந்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் உட்பட மேலும் இருவர் கைது appeared first on Dinakaran.