×
Saravana Stores

அமைச்சர் தகவல்: 2,553 டாக்டர் பணியிடங்களுக்கு 27ல் தேர்வு

சென்னை: சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:
வருகின்ற 14 மற்றும் 15ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1271 செவிலியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரந்தர பணி நியமன ஆணைகள் தரப்படவிருக்கிறது.

27ம் தேதி 2553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு 24,000 மருத்துவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறவிருக்கிறது. பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் மருத்துவத்துறையில் உள்ளது போன்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு 38 வழக்குகள், இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் தேர்வு நடத்துவதற்குரிய பணிகளை தொடங்கியிருக்கிறோம். 2250 கிராம சுகாதார பணியிடங்களை நிரப்புவதற்கு உச்சநீதிமன்றம் வரை 30க்கும் மேற்பட்ட வழக்குகள், இந்த வழக்குகள் தீர்க்கப்பட்டு விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை மாநகராட்சி நிர்வாகம் நிரப்ப உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் தகவல்: 2,553 டாக்டர் பணியிடங்களுக்கு 27ல் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,SUPRAMANIAN ,NURSES ,
× RELATED கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும்...