×
Saravana Stores

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.86 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 348 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இயற்கை மரணமடைந்த 16 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.2,72 லட்சம் மதிப்பிலான ஈமச்சடங்கிற்கான நிதியுதவி காசோலைகளையும், 6 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு 500 ரூபாய் மதிப்பிலான மூக்கு கண்ணாடி என மொத்தம் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Kanchi People's ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram Collector ,Kanchipuram District Collector ,Office Complex People's Harmony Center ,Kanchi ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட...