- கலை திருவிழா
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு: 2024-2025க்கான கலை விழா
- பள்ளி கல்வித் துறை
- செங்கல்பட்டு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பள்ளி கல்வி துறை சார்பில், 2024-2025ம் ஆண்டுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு குறுவட்டம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலைத் திருவிழா பல்வேறு கலைவடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும்.
உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டைக் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும். இந்நிலையில், செங்கல்பட்டு புனித மரியன்னை மேல்நிலை பள்ளிவளாகத்தில் மாவட்ட அளவில் 22.8.2024 முதல் 7.9.2024 நாட்களில் நடைபெற்ற போட்டிகளில் 60,748 மாணவர்கள் பங்குபெற்று அதில் மாணவர்கள் முதலிடம் பெற்றார்கள். இதில், வட்டார அளவில் 2.11.2024 முதல் 7.11.2024 நாட்களில் நடைபெற்ற போட்டிகளில் 38,151 மாணவர்கள் பங்கு பெற்று அதில் 5,495 மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்கள்.
இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வட்டார அளவில் 163 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்பொழுது 11.11.2024 மற்றும் 13.11.2024 நடைபெற உள்ள கலைத் திருவிழா போட்டிகளில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 1,538 மாணவர்கள் மாவட்ட அளவில் பங்கு பெறுகின்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மேலும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலை அரசன், கலை அரசி என்ற விருதுகளும் வழங்கப்படும்.
மாவட்டத்தில் 2022-2023ம் ஆண்டில் 44 மாணவர்கள் முதலிடம் பெற்றனர். இதில், 2023-2024 ஆண்டு 19 மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஒரு மாணவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்காக தேர்வாகியுள்ளார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சப் – கலெக்டர் நாராயண சர்மா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post செங்கல்பட்டில் நடந்த கலைத்திருவிழாவில் மாணவிகள் அசத்தல்: எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.