×
Saravana Stores

வணிகவரித்துறையில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது: அமைச்சர் மூர்த்தி தகவல்


சென்னை: வணிகவரித்துறை வருவாய் 2024-25 நிதி ஆண்டின் அக்டோபர் மாதம் வரை ரூ.79772 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் அக்டோபர் மாதம் வரை ஒப்பிடுகையில் ரூ.9229 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி. அவர்கள் தலைமையில் இன்று (11.11.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.70543 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.79772 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி இந்திய அளவில் 11.59 சதவிகிதம் எனவும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி 19.39 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அவர்கள் பேசுகையில், இணை ஆணையர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆக்கபூர்வமாக செயலாற்றிட வேண்டுமென்றும் அறிவுறித்தினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் . பிரஜேந்திர நவ்நீத். வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்காமூர்த்தி. மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

The post வணிகவரித்துறையில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,CHENNAI ,Commercial Tax Department ,Minister Murthy ,Dinakaran ,
× RELATED கால்வாய் அமைக்கும் பணியை...