×

நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு: நாளை விசாரணைக்கு வாய்ப்பு

மதுரை: தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசினார். பிராமணர்களுக்கு பாதுகாப்பு கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு பெண்களை இழிவுப்படுத்தி பேசியிருந்தார். இது தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது சென்னை, மதுரை காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிபப்டையில் நடிகை கஸ்தூரி மீது சென்னை, மதுரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு சென்றபோது கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார். வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான நிலையில் கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் நடவடிக்கை தீவிரம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நாளை விசாரணைக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு: நாளை விசாரணைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,ICourt ,Madurai ,Madras High Court ,Chennai ,Brahmins ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி