×

நீட்விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி மனு அளிக்க, தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதலளிக்க கோரி மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்க உள்ளது. நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் சந்திக்கும் பாதிப்புகளை எடுத்துக் கூறி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்மீது ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு குடியரசு தலைவரிடம் மனு அளித்தது. இதற்கு பதிலளித்த குடியரசு தலைவர் மாளிகை அலுவலகம் மனுவின் நகல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்.பி., டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து டி.ஆர். பாலு, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி.க்கள் விமானத்தில் டெல்லி கிளம்பினர். அனைத்துக் கட்சி குழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் உள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள விதிகளின் படியே நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் கேட்பதாக ஏற்கெனவே திமுக எம்.பி., டி.ஆர். பாலு தெரிவித்திருந்தார்.            …

The post நீட்விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கோரி மனு அளிக்க, தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Exclusion Bill GP ,Amitshah ,Delhi ,Pcks ,Tamil ,Nadu ,Amitsha ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...