×

உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள்

சென்னை: உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல், கமல்ஹாசன் அல்லது KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது எனவும் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திரைத்துறையினர், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாக இருக்கிறேன். எந்த ஒரு தனி மனிதனையும் விட சினிமாக் கலை பெரியது; நிறைய யோசனைக்கு பிறகு அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

The post உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chennai ,Kamal ,KH ,People's Justice Center ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...