×
Saravana Stores

அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி தடுப்பு மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புக் கடிக்கான தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை செயலாளர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் 2023ம் ஆண்டு 4,41,804 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 18 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர், அதேபோல 2024 ஜூன் வரை 2,42,782 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 19,795 பாம்பு கடி சம்பவங்களும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 7,310 பாம்பு கடி சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்தப் பிரச்னைகளை சமாளிக்க, அனைத்து முதன்மை சுகாதார மையங்கள் (PHC) மற்றும் இணைந்த சுகாதார மையங்களில் (CHC) 24 மணி நேரமும் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) மற்றும் பாம்பு கடி எதிர்ப்பு தடுப்பூசி (ASV) கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 10 குப்பிகள் எந்த நேரத்திலும் பயன்படுத்தும் அளவிற்கு தயாராக வைத்து இருக்க வேண்டும். பாம்பு கடி என வருவோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்திய பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி தடுப்பு மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,Chennai ,Tamil Nadu ,Secretary of the ,Department ,of ,Public Health ,Selva Vinayalam ,Dinakaran ,
× RELATED கருப்பைவாய் புற்றுநோய்...