×
Saravana Stores

சிறுபான்மையின மாணவர்கள் கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சிறுபான்மையின மாணவர்கள் கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு: 2024-2025க்கு புதிதாக துவங்கப்படவுள்ள அரசு சிறுபான்மையினர் நலக்கல்லூரி மாணவர் விடுதி சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவர் விடுதியுடன் கூடுதலாக இணைந்து செயல்பட உள்ளதால் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் இந்த கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்.

விடுதி மாணவ, மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு ஜமுக்காளம், போர்வை வழங்கப்படும். மாணவர்களின் அத்தியாவசியத் தேவைக்கென மாதம் ₹150 வீதம் 10 மாதங்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் இசிஎஸ் மூலம் வரவு வைக்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ₹2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே விடுதியில் தங்கிப் பயில இடம் வழங்கப்படும். தகுதியுடைய மாணவர்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 6ம் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சிறுபான்மையின மாணவர்கள் கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Ruler ,Chennai ,Governor ,Rashmi Siddharth Jagade ,Government Minority Welfare College Student Accommodation ,Chennai Kindi Campus ,
× RELATED கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024)...