×

மத மோதலை ஏற்படுத்த முயற்சி ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது போலீசில் புகார்

திருவனந்தபுரம்: ஒன்றிய இணை அமைச்சரான சுரேஷ் கோபி அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வயநாட்டில் பாஜ வேட்பாளர் நவ்யா ஹரிதாசை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: வக்பு வாரியம் அரக்கத்தனமானது. அதற்கு பூட்டு போட்டே தீருவோம். நாடாளுமன்றத்தில் வக்பு வாரியத்திற்கு எதிரான தீர்மானத்தை மிக எளிதாக நிறைவேற்றி விடலாம்.

ஆனால் ஒரு அரசியல் மரியாதைக்காகத் தான் நாடாளுமன்ற கூட்டு கவுன்சிலுக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத் தொடரில் இதற்கு ஒரு முடிவு வரும். இந்த அரக்க செயல் முளைத்து வருவதற்கு விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில் ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு எதிராக வயநாடு மாவட்டம் கம்பளக்காடு போலீசில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சுரேஷ் கோபி மத உணர்வை புண்படுத்தி விட்டார் என்றும், மத மோதலை ஏற்படுத்த முயற்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மத மோதலை ஏற்படுத்த முயற்சி ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Suresh Gopi ,Thiruvananthapuram ,Union Joint Minister ,Wayanad ,BJP ,Navya Haridas ,
× RELATED ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு: 2 பேரிடம் விசாரணை