×

காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் கைது

புதுடெல்லி: கனடா நாட்டின் ஒன்டாரியோவில் உள்ள மில்டன் நகரில் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கனடா போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர்களை கனடா வெளியிடவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கனடாவை சேர்ந்த ரவுடி கும்பலின் தலைவன் அர்ஷ்தீப் சிங் கில் என்ற அர்ஷ் டல்லா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் படையுடன் தொடர்புடையவர். மேலும் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு நெருக்கமானவர். கடந்த ஜனவரி மாதம் இந்தியா அர்ஷ் டல்லாவை தீவிரவாதி என அறிவித்துள்ளது. இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அர்ஷ் டல்லா கோஷ்டியை சேர்ந்த 2 ரவுடிகளை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் கைது appeared first on Dinakaran.

Tags : Canada ,New Delhi ,Milton, Ontario, Canada ,
× RELATED அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய...