×
Saravana Stores

இங்கி. பிரதமரின் தீபாவளி விருந்தில் மது, அசைவம்: இந்து அமைப்புகள் கண்டனம்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த 29ம் தேதி தீபாவளி கொண்டாடினார். இதில் இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். இந்நிலையில் பிரதமர் ஸ்டார்மர் வழங்கிய விருந்தில் மது, அசைவ உணவுகள் இடம் பெற்றிருந்தது குறித்து இங்கிலாந்தில் உள்ள பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்து சமூகத்தினருக்கான இன்சைட் யுகே எனும் அமைப்பு தனது சமூக ஊடக பதிவில், ‘‘தீபாவளி விருந்தில் புனிதத்தை பாதுகாக்க நிச்சயம் சைவ உணவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும், மது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் எந்த புரிதலும் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்திருப்பது தெரிகிறது’’ என கூறப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையுடன் சீக்கியர்களின் புனித தின விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டதாக இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இங்கி. பிரதமரின் தீபாவளி விருந்தில் மது, அசைவம்: இந்து அமைப்புகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : PM's Diwali dinner ,London ,UK ,Gair Stormer ,Diwali ,Starmer ,
× RELATED எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய லண்டனை...