×

அனைத்து மருத்துவமனைகளில் மக்களின் கருத்துகளை படிவ வடிவில் பெற ஆணை

சென்னை: அனைத்து மருத்துவமனைகளின் பொறுப்பு அதிகாரிகள், மக்களின் கருத்துகளை படிவ வடிவில் பெற பொது சுகாதாரத்துறை உத்தரவு அளித்துள்ளது. மக்கள் கருத்துகளை படிவ வடிவில் பெற பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருத்துவமனைகளை மேம்படுத்தும் விதமாக நோயாளிகளிடம் கருத்து படிவத்தை பொறுப்பு அதிகாரிகள் பெற ஆணை பிறப்பித்துள்ளார். படிப்பறிவு குறைவாக உள்ள நோயாளிகளிடம் விளக்கம் தந்த பிறகு படிவத்தை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் புதிய படிவம் வழங்கி நிரப்ப வேண்டும்; யாரையும் கட்டாயப்படுத்தி படிவத்தை நிரப்பக் கூடாது.

வாரத்திற்கு 10 நோயாளிகளிடம் படிவத்தை பெற்று சுகாதாரத் துறை மின்னஞ்சலுக்கு நவ. 14க்குள் அனுப்ப வேண்டும். மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சிகிச்சைகள், மருத்துவர்கள் செயல்பாடுகள் குறித்து படிவத்தில் கேள்வி கேட்கப்பட்டிருக்கும். உள்நோயாளிக்கான பராமரிப்புகள், வெளியேற்றம், செயல்முறைகள் குறித்து படிவத்தில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

 

The post அனைத்து மருத்துவமனைகளில் மக்களின் கருத்துகளை படிவ வடிவில் பெற ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Public Health ,Director of ,Public ,Health ,Shelva Vinayagam ,
× RELATED பூச்சிக்கொல்லி மருந்து விற்க உரிமம்...