×

சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தப்பியோட்டம்!

சென்னை: சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தப்பியோட்டம். தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் குறித்து விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மனை வழங்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீசார் சென்றிருந்தனர். சம்மனை வாங்க மறுத்த நிலையில் கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். தலைமறைவான நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

The post சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தப்பியோட்டம்! appeared first on Dinakaran.

Tags : Kasturi ,Chennai Ramampur Police ,Chennai ,Chennai Ulampur police ,Samman ,Musk ,Raumpur police ,station ,Chennai Ramumbur Police ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நடிகை...