×

மூணாறு மலைச்சாலையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்

மூணாறு, நவ.10: மூணாறு மலைச்சாலையில் ஆபத்தை உணராமல் சாகச பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மூணாறில், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கேப் மலைச்சாலையில் சுற்றுலாப்பயணிகள் விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணிக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக அறிவிப்பு பலகைகளும் பல இடங்களில் வைத்துள்ளனர்.

இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேப் மலை சாலை பகுதியில் விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் சாகச பயணம் செய்த ஆறு வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரண்டு கார்களில் மூணாறுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கேப் மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், ஓடிக்கொண்டிருக்கும் காரில் இரு புறமும் வெளியில் தெரியும்படி காரின் கதவில் அமர்ந்தபடி பயணித்துள்ளனர். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூணாறு மலைச்சாலையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Munnar Hill Road ,Munnar ,Kerala ,Idukki district ,Kochi-Dhanushkodi National Highway ,
× RELATED மூணாறு அருகே புலி நகத்தை விற்க முயன்றவர்கள் கைது