×

செந்துறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

நத்தம், நவ. 10: நத்தம் அருகே செந்துறையில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நத்தம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரஞ்சன் துரை, முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிப் பேசினர்.

இதில் மாநில பொதுக்குழு முத்துக்குமார சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் அழகர்சாமி, பொன்மணி, ஒன்றிய பொருளாளர் ஹபிபுல்லா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் துர்க்க சங்கீதா பிரசாத், வீரணன், கருத்தப்பாண்டி, அவைத் தலைவர் ராசு, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பிச்சை மணி, சிறுபான்மையினர் அணி அயூப், வர்த்தகர்கள் அணி மதியரசு, நிர்வாகிகள் சேகர், குமரன், ஆசிரியர் சேகர், துரைராஜ், புதுப்பட்டி ஊராட்சித் தலைவர் பழனியம்மாள் மகாலிங்கம், முன்னாள் கோசு குறிச்சி ஊராட்சித் தலைவர் பாரூக் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று நத்தம் பேரூராட்சி வார்டுகளுக்கான வாக்குச் சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நகரச் செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் நடந்தது. இதிலும் மாவட்ட பொருளாளர் விஜயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post செந்துறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Sentura ,Natham ,Northern Union DMK ,Union Secretary ,Palaniswami ,Natham Assembly Constituency ,Ranjan Durai ,MLA ,Andi ,Dinakaran ,
× RELATED செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில்...