×
Saravana Stores

மெல்ல கற்கும் மாணவர்களை சிறப்பு பயிற்சியின் வாயிலாக 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும்

புதுக்கோட்டை, நவ.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,12ம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வு எழுதும் மெல்லக்கற்கும் மாணவர்களை சிறப்பு பயிற்சியின் வாயிலாக 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்று மீளாய்வுக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு , உதவிபெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதியம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் கலந்துகொண்டு பேசியதாவது.

காலாண்டுத் தேர்வில்10,12- ம் வகுப்புகளில் பள்ளி மற்றும் பாட வாரியான தேர்ச்சி அறிக்கையினை பகுப்பாய்வு செய்தும், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்ட விபரத்தினை எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டியதின் அவசியம் குறித்தும், கல்வி உதவித் தொகை சார்ந்து மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விபரம், சானிட்டரி நாப்கீன் எரியூட்டிகள் மற்றும் வென்டிங் மிஷன் நிறுவப்பட்ட விபரம், 6- ம் வகுப்பு முதல் 9- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியப் பாடங்களில் அடிப்படைத் திறனில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அத்தகைய மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையினை எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்தல் பற்றியும், அனைத்து விலையில்லா நலத்திட்டங்களையும் டி.என். எஸ் .இ.டி செயலியில் பதிவு செய்தல் குறித்தும், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு சார்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு பேரணி மற்றும் போட்டிகள் பள்ளிகளில் நடத்தி அறிக்கை அனுப்ப வலியுறுத்தியும், மாவட்டஆட்சித்தலைவர்அவர்களின்வழிகாட்டலுடன் அந்தந்த பள்ளியின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள 10,12 – ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான சிறப்புக்கையேட்டினைபிரதிஎடுத்துமாணவர்களுக்குவழங்கி சிறப்பு பயிற்சியின் வாயிலாக இந்த ஆண்டு அரசுப்பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வைப்பது பற்றியும், பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் குறித்தும் விரிவாகவும், விளக்கமாகவும் அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ஜெயந்தி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், வெள்ளைச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளையராஜா மற்றும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்

The post மெல்ல கற்கும் மாணவர்களை சிறப்பு பயிற்சியின் வாயிலாக 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Principal Education Officer ,Shanmugam ,Mellakakum ,
× RELATED மாணவிகளிடம் பணம் வசூல் செய்துநெல்லை...