×

திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது-விவசாயிகள் கவலை

திருவாரூர் : காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவா ரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் ஆகும். நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் தெளிப்பு முறை யிலும், நடவு முறையிலும் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளன. இம்மாவட்ட விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி யில் புயல், மழை, வெள்ளம், வறட்சி ஆகிய ஏதாவது ஒரு இயற்கை இடர் பாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகி பொருளா தார இழப்பீடுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந் தது. அதனை தொ டர்ந்து கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்தது.குறிப்பாக, நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 6 மணிவரை மாவட்டத்தில் திருவாரூரில் 70.9 மி.மீ, நன்னிலத்தில் 54.5 மி.மீ, குடவாசலில் 64.6 மி.மீ, வலங்கைமானில் 67.6 மி.மீ, மன்னார்குடியில் 50.05 மி.மீ, நீடாமங்கலத் தில் 31. 08மி.மீ, பாண்டவை ஆற்று தலைப்பில் 56. 06மி.மீ, திருத்துறைப்பூண்டியில் 111. 08 மி.மீ, முத்துப்பேட்டையில் 192 மி.மீ, மழை பெய்துள்ளது.இதன் காரணமாக, திருவாரூர் அருகே கானூர், வேப்பத்தாங்குடி இதேபோல் மன்னார்குடி அடுத்த ராமாபுரம், தருசுவேலி, கர்ணாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.இத்தகைய சூழலில் விவசா யிகள் பயிரை சூழ்ந்துள்ள மழை நீரை வடியவைக்க இரவு பகல் பாராமல் பயிரை காப்பாற்றிட போராடி வரு கின்றனர். மேலும், மழை அதிகரித்தால் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் தர்ம சுவாமிநாதன் கூறுகையில், பல்வேறு இன்னல்களுக்கு இடையே சாகுபடி செய்துள்ள நெல்மணிகள் அறுவடை நெருங்கி வரும் நிலையில் பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக மழைநீரில் பயிர்கள் மூழ்கி அழுகுவதால் பெரியளவில் மகசூல் குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உள்ளது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க தமிழக முதல்வர் கேட்டுள்ள தொகை யை ஒன்றிய அரசு உடன் வழங்கினால் மட்டுமே தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க முடியும் என்றார்.திருத்துறைப்பூண்டி :திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ள சம்பா நெல் பயிர்கள் சுமார் 5,000ஏக்கரில் மழைநீரில் சாய்ந்து மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர் மேலும் தொடர்ந்து மழை பெய்தால் மழைநீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைத்து அனைத்தும் வீணாகிவிடும் நிலை ஏற்படும் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைத்தால் மட்டுமே இப்போது அறுவடைக்கு தயாரான சம்பா நெல் பயிர்களை காப்பாற்ற முடியும் இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக சம்பா அறுவடைவயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண்மைதுறை அதிகாரிகள் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் பயிர்களை காப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Tiruvarur ,Thiruva Rur district ,Cauvery Delta ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர...