×

விரிகோட்டில் ரயில்வே கேட் பழுது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மார்த்தாண்டம், நவ.10: மார்த்தாண்டம் விரிகோட்டில் ரயில்வே கேட் பழுதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் ரயில்வே கேட் உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்து கருங்கல் செல்லும் ரோடு என்பதால் இந்த தடத்தில் அதிகமான வாகனங்கள் செல்வது வழக்கம். குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரயில் செல்வதற்காக இந்த கேட் நேற்று காலை 7:15 மணிக்கு பூட்டப்பட்டது. ரயில் சென்ற பிறகு கேட் திறக்க முடியவில்லை. ஊழியர் கடுமையான முயற்சி மேற்கொண்ட பிறகும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் வருகை தந்து பராமரிப்பு பணி செய்த பிறகு 8.40 மணிக்கு இந்த கேட் திறக்கப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

The post விரிகோட்டில் ரயில்வே கேட் பழுது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : MARTHAM ,MARTHAM BAY ,Marthandam ,Marthanthath ,Karangal ,Guruvayur ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி