×

தக்காளி கிலோ ₹25க்கு விற்பனை

அரூர், நவ.10: தர்மபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் தக்காளியை பெட்டிகளில் அடுக்கி சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். உள்ளூர் வியாபாரிகளும், மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் 27 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ₹800 முதல் ₹900 வரை விற்பனையானது. தற்போது, ₹400 முதல் ₹500 வரை விற்பனையாகிறது. வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தக்காளி விலை குறைந்துள்ளது. சில்லரையில் கிலோ ₹25 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post தக்காளி கிலோ ₹25க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Dharmapuri district ,Gopinathampatti Kootrodu ,Morapur ,Campinallur ,Irumathur ,Odasalpatti Kootrodu ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை