- அமைச்சர்
- பொறியாளர் சங்கம்
- சென்னை
- ஏ.வி.வேலு
- தமிழ்நாடு பொது பணி பொறியாளர்கள் சங்க
- பொதுப்பணித்துறை பொறியாளர்கள்
- தமிழ்நாடு பொதுப்பணித் துறை
சென்னை: பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு என புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் சிறப்பாக செயல்பட அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொதுப்பணித்துறை 1858ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 165 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு சூழ்நிலையின் காரணமாக அண்மையில் அரசு ஆணைப்படி பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிந்தது.
இந்நிலையில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு பொறியியல் பணியின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் அவர்தம் பணிச்சூழல் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் கீழ் பதியப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித் துறையின் தலைமை பொறியாளர்களான மணிவண்ணன் (தலைவர்), செல்வராஜ் (துணைதலைவர்), செந்தில் (துணைதலைவர்) தலைமையில் பொதுப்பணித்துறைக்கென புதிதாக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.
The post பொறியாளர் சங்கத்துக்கு அமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.