×

கனகம்மாசத்திரம் அருகே வடை சுட்டபோது சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்தது; பெண் உயிர் தப்பினார்

திருத்தணி: கனகம்மாசத்திரம் அருகே வடை சுட்டபோது, சிலிண்டர் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதமானது. பெண் உயிர் தப்பினார். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே தோமூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (54). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் ஏழுமலை இறந்து விட்டர். இதனால், இந்த கூரை வீட்டில் வள்ளியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை காஸ் அடுப்பில் வள்ளியம்மாள் வடை சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில் திடீரென வெடித்து சிதறியது. இதில் தீப்பொறி பரவியதில் கூரை வீட்டில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

வள்ளியம்மாள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார். தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பணம், பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. புகாரின்பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கனகம்மாசத்திரம் அருகே வடை சுட்டபோது சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்தது; பெண் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : KANAGAMMASATRAM ,Thiruthani ,Vardah ,Valliyammal ,Tomur ,Kanagammasatram, Thiruvallur district ,Vadi ,Kanakammasatram ,
× RELATED மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக...