×

சேலம் அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

சேலம்: சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பிடித்து எறியத் தொடங்கிய நிலையில், உள்ளே இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக மீட்கப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சேலம் அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Coimbatore-Salem National Highway ,Salem ,Salem Sangakiri ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி