×

போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தடை கோரி வழக்கு: எடப்பாடி பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து திமுக சார்பில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், சமீபத்திய போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பாக திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகினர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தடை கோரி வழக்கு: எடப்பாடி பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Edappadi High Court ,Chennai ,Chennai High Court ,Edappadi Palaniswami ,DMK Organization ,RS Bharti ,Madras High Court ,Edappadi ,High Court ,Dinakaran ,
× RELATED அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ...