×

ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல்

மும்பை: நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் கடந்த மாதம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கானிடம் பணம் கேட்டு பல மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவன் என்று கூறி ரூ.5 கோடி கேட்டு சல்மானை மிரட்டிய அரியானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரில் சல்மான் கான் ரூ.5 கோடி தரவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Mumbai ,Nationalist Congress ,Baba Siddiqui ,Lawrence Bishnoi ,Dinakaran ,
× RELATED மராட்டிய மகாயுதி கூட்டணி அரசில்...