×
Saravana Stores

பெண் விளையாட்டு வீராங்கணையை ஆள்மாறாட்டம் மூலம் தொடர்ந்து அருவருக்கதக்க வார்த்தைகளை கூறி தொல்லை செய்த குற்றவாளி கைது

சென்னை : தமிழ்நாடு இணைய வழி குற்ற பிரிவு காவல் துறை ஆள் ஆள்மாறாட்டம் மூலம் பெண்ணை தொலைபேசி மூலம் துன்புறுத்திய நபரை கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கபட்ட நபர் பிரபலமான சர்வதேச விளையாட்டு வீரர் ஆவார். குற்றவாளி பிரபலமான பெண் விளையாட்டு வீராங்கணைகளின் புகை படங்களை வைத்து பாதிக்கப்பட்ட நபருக்கு WhatsApp மூலம் செய்திகளும் மற்றும் இரவு நேரத்தில் அழைப்புகளும் அதன் மூலம் அருவருக்கதக்க வார்தைகளை கூறி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் குற்றவாளியின் எண்ணை தடுத்த பிறகும் புதிய எண்களில் இருந்து இரவு நேரங்களில் அருவருக்கதக்க முறையில் பேசியும் தொந்தரவு கொடுத்தும் துன்புறுத்தியுள்ளார்.

இது சம்மதமாக 21.09.2024 அன்று பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் மாநில இணைய தள குற்ற பிரிவு தலைமையகம் சென்னையில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது. இவ்வழிக்கில் தீவிர புலன்விசாரணை செய்து சம்மந்தபட்ட குற்றவாளி சாசிலி சிவா தேஜா என்பவர் பெங்களூருவில் இருந்து குற்றம் செய்துள்ளது கண்டுபிடிக்கபட்டு தனிப்படை அமைக்கபட்டு பெங்களூரு சென்று குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கபட்டார்.

பொதுமக்களுக்கு அறிவுரை:

1) தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்: உங்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது அழைப்புகள் வந்தால், அனுப்புநருடன் பதிலளிப்பதையோ தொடர்புகொள்வதையோ தவிர்க்கவும். தனிப்பட்ட தகவல்கள், பணம் அல்லது உங்கள் கணக்குகளுக்கான அணுகல் ஆகியவற்றைப் பகிர வேண்டாம்.
2) எண்களை தடுத்தல் : அச்சுறுத்தல் அல்லது தவறான செய்திகளைப் பெற்றால் உடனடியாக அந்த எண்ணைத் தடுக்கவும். மேலும் புதிய எண்களுக்கு அல்லது துன்புறுத்தலைத் தொடர வெவ்வேறு தொலைபேசி எண்களை மோசடி செய்பவர்கள் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
3) தனியுரிமை அமைப்புகளை இயக்கவும்: உங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி அனுப்புவதரக்கான செயலிகளில் தனிதன்மை உடையதாக இருக்குமாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். மற்றும் உங்கள் இருப்பிடம், நண்பர்கள் அல்லது குடும்பத்தைப் பற்றிய விவரங்களை பகிரங்கமாக பகிர்வதைத் தவிர்க்கவும்.
4) சிவப்பு கொடிகளைத் தேடுங்கள்: உங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்து செய்திகள் அல்லது அழைப்புகளைப் பெற்றால் எச்சரிக்கையாக இருங்கள், குறிப்பாக அவர்கள் பணம், தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு அல்லது உங்கள் உணர்வுகளை தூண்டி மோசடி செய்யக்கூடும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
5) அறியப்படாத தொடர்புகளைச் சரிபார்க்கவும்: தெரிந்த ஒருவர் போல அல்லது பொது நபர் என்று கூறி அறியப்படாத எண்ணிலிருந்து எந்தவொரு உரையாடலிலும் ஈடுபடுவதற்கு முன்பு, அந்த நபரின் அடையாளத்தை சரிபார்க்கவும்,
6) அழுத்தத்திற்கு அடிபணியாதீர்கள்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் திரித்து கூறுதல் மூலம் அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகிறார்கள் எனவே, அமைதியாக இருங்கள் மற்றும் எந்தவொரு உணர்வு பூர்வமான நடவடிக்கைகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.

புகார் பதிவுக்கு:
நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப்பற்றி புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

The post பெண் விளையாட்டு வீராங்கணையை ஆள்மாறாட்டம் மூலம் தொடர்ந்து அருவருக்கதக்க வார்த்தைகளை கூறி தொல்லை செய்த குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Cyber Crime Unit Police Department ,
× RELATED சென்னையில் மழைநீரை வெளியேற்ற குழாய் வடிகால்கள்