சென்னை: தூதரக ரகசியங்களை திருடும் நோக்கில் இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்அப் செயலியை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆணையராக துரைசாமி வெங்கடேஸ்வரன் உள்ளார். இவரது வாட்ஸ்அப் செயலியை நேற்று முன்தினம் மர்ம நபர்கள், தூதரக ரகசிய பரிமாற்றங்களை திருடும் நோக்கில் ஹேக் செய்ததாக கூறப்படுகிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். மேலும், சம்பவம் குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தார்.அந்தபுகாரை தொடர்ந்து சென்னை பெருநகர சைபர் க்ரைம் விசாரணை நடத்த கமிஷனர் அருண் உத்தரவிட்டார். தொடர்ந்து பெருநகர சைபர் க்ரைம் போலீசார் தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் இலங்கை துணை தூதரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்அப் ‘ஹேக்’: மர்மநபர்கள் குறித்து சைபர் க்ரைம் விசாரணை appeared first on Dinakaran.