×

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆப்கன் அபார வெற்றி

சார்ஜா: ஆப்கானிஸ்தான்- வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவரில் 235 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது நபி 84 ரன் (79 பந்து), கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 52 ரன் அடித்தனர். வங்கதேச பவுலிங்கில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 47, சவுமியா சர்க்கார் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 28 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினார். 34.3 ஓவரில் 143 ரன்னுக்கு வங்கதேசம் ஆல்அவுட் ஆனது. இதனால் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் வெற்றி பெற்றது. பவுலிங்கில் அந்த அணியின் அல்லா கசன்பர் 6 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதுபெற்றார். ரஷித்கான் 2 விக்கெட் வீழ்த்தினார். 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆப்கன் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Afghanistan ,Charjah ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் இந்து கோயில் நிர்வாகி அடித்துக் கொலை