×

பயங்கரவாதம் இல்லாத இந்தியா; ஒன்றிய அரசு உறுதி; அமித்ஷா

புதுடெல்லி: பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2024 இன்று நடைபெற உள்ளது. இதில் எதிர்கால பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகள், இந்தியாவுக்கு வெளியே செயல்படும் பயங்கரவாத குழுக்களை சர்வதேச அரசுகளின் உதவியுடன் எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது ‘எக்ஸ்’ தள பதிவில், “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. இன்று தொடங்கும் 2 நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, பாரதத்தின் பாதுகாப்பு கோட்டையை வலுப்படுத்தும் அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தும். மாநாட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

The post பயங்கரவாதம் இல்லாத இந்தியா; ஒன்றிய அரசு உறுதி; அமித்ஷா appeared first on Dinakaran.

Tags : India ,Union Government ,Amit Shah ,New Delhi ,Anti-Terrorism Conference-2024 ,National Intelligence Agency ,NIA ,
× RELATED பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு...