×

நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (39). பாத்திர வியாபாரி. இவர் மனைவி தாமரை செல்வி. இவரது மூத்த மகள் முத்துலட்சுமி (18). இவர் கடந்த 2023ம் ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். பின்னர் நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி படித்து கடந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு வேறொரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஆனால் விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க பணம் இல்லை என்று மணிகண்டன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துலெட்சுமி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

The post நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : NEET ,Kalakkadu ,Manikandan ,Kalakkadu Riverside Street, Nellai District ,Tamarai ,Muthulakshmi ,Dinakaran ,
× RELATED கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது