×

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்றது. அப்போது ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு பாஜ எம்எல் ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சபாநாயகருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடும் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே ஜம்முவின் சிறப்பு அந்தஸ்து ஒருதலைபட்சமாக நீக்கப்பட்டது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜம்முவின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆளும் தேசிய மாநாட்டு கட்சியானது, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக கூறியது. முதல்வர் உமர் அப்துல்லா சட்டப்பேரவை தனது வேலையை செய்துள்ளது என்றார். குரல்வாக்கெடுப்பின் போது மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

The post ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu and Kashmir Legislative Assembly ,Jammu ,Kashmir ,BJP MLAs ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில்...