×
Saravana Stores

மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வித்யாலஷ்மி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


புதுடெல்லி: பிரதமரின் வித்யாலஷ்மி திட்டம் ஒன்றிய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும். தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்த திட்டம் பொருந்தும். இதன் மூலமாக சுமார் 22லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விரும்பினால் பிரதமர் வித்யாலஷ்மி திட்டத்தின் பலன்களை பெற முடியும்.

இந்நிலையில் வித்யாலஷ்மி திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி, ” நாட்டில் எந்தவொரு இளைஞரும் தரமான உயர்கல்வியை தொடர்வதை நிதிபிரச்னைகள் தடுக்கக்கூடாது என்பதற்கான திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பிரதமரின் வித்யாலஷ்மி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

உணவுகழகத்திற்கு ரூ.10,700 கோடி நிதி
ஒன்றிய அமைச்சரவை நேற்று இந்திய அரசுக்குச் சொந்தமான உணவுக் கழகத்தில் பங்குத்தொகையாக ரூ.10,700 கோடி செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உணவு தானியங்களை கொள்முதல் செய்து சேமித்து வைப்பதற்கும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் சிறந்த வாய்ப்பு ஏற்படும்.

The post மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வித்யாலஷ்மி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Cabinet ,NEW DELHI ,UNION GOVERNMENT ,Dinakaran ,
× RELATED ராணுவ வாகனம் மற்றும் ரோந்து ஹெலிகாப்டர் வாங்கும் பணி துவக்கம்