×

‘மெட் காலா’ பேஷன் நிகழ்ச்சி பிரியங்கா சோப்ரா, அலியா பட் பங்கேற்பு

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றனர். ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை, திரை நட்சத்திரங்கள் முதல் மாடல் அழகிகள் வரை கவனிக்கப்படும் முக்கிய பேஷன் நிகழ்வான ‘மெட் காலா’ நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், மாடல்கள், இசைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் வித்தியாசமான உடையுடன் வந்து சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றனர். இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகைகள் அலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோர் வித்தியாசமான உடை அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்தனர். அலியா பட் அணிந்து வந்த ஆடை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற பேஷன் ஆடையை ‘கேன்ஸ்’ விழாவில் நடிகை தீபிகா படுகோன் அணிந்திருந்தார் என்றும், அதேபோல் அலியா பட்டும் அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் அலியா பட், பிரியங்கா சோப்ரா பங்கேற்றது, பாலிவுட்டுக்கு பெருமையான விஷயம் என பாலிவுட் கலைஞர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post ‘மெட் காலா’ பேஷன் நிகழ்ச்சி பிரியங்கா சோப்ரா, அலியா பட் பங்கேற்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Met Galla ,Priyanka Chopra ,Alia Butt ,New York ,Met Gala fashion show ,Hollywood ,Bollywood ,Met Cala ,Aliya Butt ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரியங்கா சோப்ராவின் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை