×

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்பிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 277 எலக்டோரல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளார். இதனை அடுத்து உலக நாட்டு தலைவர்கள் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்திய பிரமர் மோடி:
எனது நண்பர் டொனால்ட் டிரம்ப் மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில், உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு நான் எதிர்நோக்குகிறேன். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தைல் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி:
அதிபர் ட்ரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்க சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமறையை கையாளும் அதிபர் ட்ரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு:
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவுக்கு புதிய தொடக்கமாக அமையட்டும். இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இத்தாலி பிரதமர் மெலோனி:
நட்பு, அசைக்கமுடியாத கூட்டணியால் இத்தாலி, அமெரிக்கா ‘சகோதரி’ நாடுகள் என பிரதமர் மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி :
வலுவான எதிர்காலத்துக்கு இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவோம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வே பிரதமர் :
டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வளர்ந்துவரும் உலகில் வலுவான தலைமை அவசியம் என நார்வே பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்சன்:
அமெரிக்காவுடனான புதிய உறவை எதிர்பார்த்துள்ளோம் என நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்சன் வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் :
இரண்டாவது முறை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற ட்ரம்புக்கு பாக், பிரதமர் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்தார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்பிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Trump ,US presidential election ,Donald Trump ,Republican Party ,President ,United States ,Dinakaran ,
× RELATED தொழிலதிபர் எலான் மஸ்க் அமெரிக்க...