×

தமிழகத்தில் புதிதாக 1,728 பேருக்கு கொரோனா தொற்று, 6 பேர் உயிரிழப்பு, 662 பேர் குணம்

சென்னை: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,594ல் இருந்து 1,728ஆக உயர்ந்துள்ளதாக தமிழக மருத்துவத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1,727 பேருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் என 1,728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,728ஆக உள்ளது.சென்னையில் மேலும் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் நேற்று 776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 876ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் மேலும் 6 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,796ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 10,364ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 662 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,05,696 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்….

The post தமிழகத்தில் புதிதாக 1,728 பேருக்கு கொரோனா தொற்று, 6 பேர் உயிரிழப்பு, 662 பேர் குணம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Medical Department ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...