×

கோயிலுக்கு அருகே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கனடா போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

ஒட்டாவா: கனடாவில் இந்து கோயிலுக்கு அருகே நடந்த காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்டனில் இந்து சபா மந்தீர் கோயில் அமைந்துள்ளது. ஞாயிறன்று இந்த கோயிலுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். கோயில் நிர்வாகம் மற்றும் இந்திய தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியையும் போராட்ட கும்பல் சீர்குலைத்தது. தூதரக அதிகாரிகள் கோயிலுக்கு சென்றபோது வன்முறை வெடித்ததை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த போராட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கனடாவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பங்கேற்றது கண்டறியப்பட்டது.

அந்த போலீஸ் அதிகாரி விடுமுறையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர் காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை காவல்துறை அதிகாரிகள் சரிபார்த்த நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு மற்றும் காவல் சட்டத்தின்படி அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஊடக தொடர்பு அதிகாரி ரிச்சர்ட் சின் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கோயில் மீதான இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு விஷயத்தின் மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post கோயிலுக்கு அருகே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கனடா போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Ottawa ,Callistan ,Canada ,Hindu ,Sabha Mandir Temple ,Brampton, Canada ,
× RELATED ஆட்சி கவிழும் அபாயம் கனடா பிரதமர்...