×

சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைப் பகுதிகளில் கனமழை; வராகநதியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணை பகுதிகளில் கனமழை பெய்தததால் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் செல்வதால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால் மஞ்சளாறு, வராகநதி கரையோர மக்களுக்கு மீண்டும் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக 10 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்துவருகிறது. நேற்று 12 செ.மீ மழை பதிவானது. இதில் சோத்துப்பாறை 36 மி.மீ, மஞ்சளாறு 36 மி.மீ, பெரியகுளம் 25 மி.மீ மழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது. மேலும் அணைகளில் இருந்து உபரிநீர் முழுவதும் வெளியேறுகிறது.

இன்று காலை நிலவரப்படி பெரியகுளம் அருகே உள்ள 126.28 உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை நிரம்பி நிற்கும் நிலையில் நீர்வரத்து 357 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே வராக நதியில் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி. அதேபோல் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளார் அணையின் தற்போதைய நீர் மட்டம் 55 அடி. அணைக்குவரும் 184 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மில்லியன் கனஅடி.

மேலும் இன்றும் சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே வராக நதி, மஞ்சளாறு பகுதிகளில் கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

The post சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைப் பகுதிகளில் கனமழை; வராகநதியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chotapara ,Manhaparu Dam ,Varaganda River ,Periyakulam ,Teni district ,Manjalaru ,Peryakulam ,Varakanadi ,Varaganadi ,Mangalore Dam ,Varaganda ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் தொடர் மழையால்...