×

ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக காவல்துறை அதிகாரியை மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எச்.டி. குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கை போலீஸ் ஐ.ஜி.சந்திரசேகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. சுரங்க முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐஜி சந்திரசேகரை பணி செய்யவிடாமல் தடுத்து குமாரசாமி மிரட்டியதாக போலீசில் புகார். மிரட்டல் விடுத்ததாக போலீஸ் ஐ.ஜி. கொடுத்த புகாரின்பேரில் பெங்களூரு சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் குமாரசாமி மீது புதிய வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,H. D. Bangalore ,Kumarasamy ,Bangalore ,H. D. ,H. D. Police ,G. ,Special Intelligence Committee ,Chandrasekhar ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு உயர் பதவிகளில் தனியார்...