×
Saravana Stores

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 387 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுக்கோட்டை, நவ.5: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 387 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.. இதற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசியதாவது: பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீரவு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ரூபவ் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சாலீபில் ரூபவ் 2021ம் ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதி வசூல் புரிந்தமைக்காக தமிழக ஆளுநர் வழங்கப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழினை ஓய்வு பெற்ற மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா மற்றும் 2023ம் ஆண்டிற்கான கொடிநாள் இலக்கினை முழுமையாக எய்திய பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதனடிப்படையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 387 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Collector ,Aruna ,Pudukottai District Collector ,District Collector ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்...