நல்லம்பள்ளி, நவ.5: தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், அரிசி லோடு ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று, சேலத்தை நோக்கி சென்றது. இந்த லாரியை சேலம் பகுதியை சேர்ந்த டிரைவர் ரவி(35) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி, தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த சுங்கச்சாவடி பணியாளர்கள் மற்றும் தொப்பூர் போலீசார், விபத்துக்குள்ளான லாரியை மீக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தர்மபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான லாரியை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.