×

மதுரை காமராஜர் பல்கலை.யில் முறையாக ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம், நவ. 5: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியத்தை முறையாக வழங்க வலியுறுத்தி ஓய்வூதிய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களாக தங்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்து நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் காமராஜர் சிலைக்கு முன்பாக சுமார் 100க்கும் மேற்ப்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஓய்வூதியத்தை மாதந்தோறும் முறையாக வழங்க வேண்டும். நிலுவையில் இருக்கும் ஓய்வூதியத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post மதுரை காமராஜர் பல்கலை.யில் முறையாக ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Kamaraj University ,Tiruparangunram ,Madurai Kamaraja University ,
× RELATED திருப்பரங்குன்றம் கோயிலில்...