அலங்காநல்லூர், நவ. 5: அலங்காநல்லூர் அருகே. கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (30). செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (28). இவர்கள் 5 வயது மற்றும் சுபாஷினி (2) என இரு மகள்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சுபாஷினி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக்ெகாண்டு இருந்தது. அப்போது அங்குள்ள கிணற்றில் எதிர்பாராத வகையில் தவறி விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார் சிவரஞ்சனி உதவி கேட்டு கூச்சலிட்டார்.
இதையடுத்து பிரசாத் மற்றும் அருகில் வசிக்கும் அவர்களின் உறவினர்கள் ஓடிவந்து கிணற்றில் குதித்து குழந்தையை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்்த அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் கிராம நிர்வாக அலுவலர் (பொ) நயினார் முகமது ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து விஏஓ கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
The post அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி: வீட்டின் அருகே விளையாடியபோது துயரம் appeared first on Dinakaran.