×
Saravana Stores

நீதிக்கு இங்கே இடமில்லை; இம்ரான் கானின் 3ம் மனைவி நீதிமன்றத்தில் கண்ணீருடன் கதறல்


இஸ்லாமாபாத்: ‘பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை. நீதி கேட்டு, இனி நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மூன்றாம் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தில் கதறியழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 3ம் மனைவி புஷ்ரா பீபி. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் மாவட்ட மாஜஸ்திரேட் நீதிமன்றத்துக்கு, புஷ்ரா பீபி நேற்று வந்திருந்தார். அப்போது, நீதிபதி முன் கண்ணீர் மல்க, புஷ்ரா பீபி பேசுகையில், ‘கடந்த 9 மாதங்களாக, நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறேன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவர் இம்ரான் கான், மனிதர் இல்லையா? இந்த அநீதியை எந்த நீதிபதியும் கண்டுகொள்வதில்லை.

இந்த நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை; இனி, நீதிகேட்டு நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என்றார். முன்னாள் பிரதமரின் மனைவி, நீதிமன்றத்தில் கதறியழுத காட்சியால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இம்ரான் கானுடன் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புஷ்ரா பீபி, கடந்த அக்.23ம் தேதிதான் விடுதலை ஆனார். அவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இம்ரான் கான் மீது, 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post நீதிக்கு இங்கே இடமில்லை; இம்ரான் கானின் 3ம் மனைவி நீதிமன்றத்தில் கண்ணீருடன் கதறல் appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Imran Khan's… ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்...