×
Saravana Stores

பிஇ, பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு செமிகண்டக்டர் பயிற்சி: சென்னை ஐஐடி பவுண்டேஷன் ஏற்பாடு

சென்னை: பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் பிளஸ்-ம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சியை அளிக்க உள்ளன.

இதில், பொறியியல், அறிவியல் பட்டதாரிகள், பொறியியல் டிப்ளமாதாரர்கள், எலக்ட்ரானிக்ஸ் பின்புலம் கொண்ட பட்டதாரிகள் சேரலாம். தற்போது படிக்கும் மாணவர்களும் சேரலாம். பயிற்சிக்கான நேரடி வகுப்புகள் ஐஐடி வளாகத்தில் நடைபெறும். இதில் செமிகண்டக்டர் தொழில்குறித்து சொல்லி தரப்படும். தொழில்நிறுவனங்களில் நேரடி பயிற்சி, ஐஐடி வளாகத்திலேயே உணவு மற்றும் தங்கும் வசதி உண்டு.

ஒரு நாள் கட்டணம் ரூ.650. பயிற்சியை சிறப்பாக முடிப்போருக்கு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். முதலாவது பயிற்சி நவம்பர் 9 முதல் 17ம் தேதி வரையும், 2வது பயிற்சி நவம்பர் 25 முதல் டிசம்பர் 3 வரையும் 3வது பயிற்சி டிசம்பர் 9 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறும். பயிற்சியில் சேர விரும்புவோர் https://iitmpravartak.org.in/cees_course என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 94983 41969 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

The post பிஇ, பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு செமிகண்டக்டர் பயிற்சி: சென்னை ஐஐடி பவுண்டேஷன் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : IIT Chennai Foundation ,CHENNAI ,IIT Chennai Pravardak Technologies Foundation ,IIT Chennai ,Union Ministry of Education… ,Dinakaran ,
× RELATED சென்னை பாரிமுனையில் பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது