×

கேரள கோயில் விழாவில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் விழாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே உள்ள அஞ்சூற்றம்பலம் வீரர்காவு கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் திருவிழாவுக்கு வந்திருந்த 154 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக காசர்கோடு, மங்களூரு, கோழிக்கோடு கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சந்தீப் என்பவர் கடந்த 2ம் தேதி மரணமடைந்தார். இந்தநிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரதீஷ் (32), பிஜு (38), ஷிபின் ராஜ் (19) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர்.  இதையடுத்து வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

The post கேரள கோயில் விழாவில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Nileswara ,Kasaragod, Kerala ,Anjuthambalam ,Nileswaram ,Kasargod District, Kerala ,temple festival explosion ,
× RELATED கேரளாவில் பங்குதாரருடன் தகாத உறவு என...