×

அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளுடன் பணியிட மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை : அனைத்து வசதிகளுடன் பணியிட மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் மற்றும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளுடன் பணியிட மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் முத்திரைத்...