×

ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த படம் வரும் 7ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பட கலைஞர்கள் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநில தலைநகரங்களில் அவர்கள் படம் தொடர்பான நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி வருகின்றனர். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாக வேண்டியது. அதன் பிறகு இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிபோடப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக டெல்லியில் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. மகாராஷ்டிராவில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் தியேட்டர் டிக்கெட் விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆர்ஆர்ஆர் படத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டதாக நேற்று தகவல் பரவியது.  ‘பல மாநிலங்களில் கொரோனா கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப் படுகிறது’ என தயாரிப் பாளர்கள் தெரிவித்தனர்….

The post ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Rajamouli ,Jr. NTR ,Ramcharan ,Ajay Devgn ,Alia Bhatt ,Shreya ,Samuthirakani.… ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...