×

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெஞ்சாலையில் பரபரப்பு மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதல்

*காயமின்றி தப்பினர்

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி நேற்று மாலை 5 மணியளவில் கார் ஒன்று சென்றது. கார் சத்துவாச்சாரி காவல் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுபோது திடீரென ஒரு மாடு குறுக்கே வந்துள்ளது. மாடு மீது கார் மோதல் இருக்க காரை நிறுத்தியுள்ளார்.

இதை பார்த்து பின்னால் வந்த மாற்றொரு காரும் நிறுத்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு பின்னால் வந்த 3வது காரும் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் கார் நிலைத்தடுமாறி நிறுத்தி இருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளார். இருப்பினும் கார்களில் இருந்தவர்களுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கிய 3 கார்களை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெஞ்சாலையில் பரபரப்பு மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Vellore Sathuvachari National Highway ,Vellore ,Bangalore ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வேலூர் அண்ணாசாலையில்