×

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது நீட் தேர்வு. எளியோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரல் தொடரும்.ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடுதான் விளங்குகிறது,” இவ்வாறு தெரிவித்தார்.

The post நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu government ,NEET ,MLA K. Stalin ,Chennai ,First Minister ,K. Stalin ,Kolathur ,EU Government ,Chief Minister ,
× RELATED வாய்ச்சவடால் விடுகின்ற எடப்பாடி...